HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 April 2012

நிலம் ஒதுக்கியதில் முறைகேடு: சர்ச்சையில் சிக்கினார் விலாஸ்ராவ் தேஷ்முக்; சிக்கலில் காங்.,

மும்பை: ஊழல் புகார் காரணமாக சர்ச்சையில் சிக்கியுள்ள காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சிக்கல் விலாஸ்ராவ் தேஷ்முக் மூலம் வந்துள்ளது. நிலம் ஒதுக்குவது தொடர்பாக தேஷ்முக் மீது தணிக்கை துறை குற்றம் சாட்டியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல அமைச்சர்கள், தங்கள் மனைவி அல்லது உறவினர்கள் தொடர்பான தொண்டு நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கியுள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நிலம் ஒதுக்கியதாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரும், மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக், ‌தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சருமான சஜன் புஜ்பால் ஆகியோர் மீதும் குறற்ம் சாட்டப்பட்டுள்ளது.

நிலம் ஒதுக்குவது தொடர்பாக மத்திய தணிக்கை துறை அறிக்கை தயாரித்துள்ளது. இது இன்னும் சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால் இந்த அறிக்கையின் நகல் மற்றும் சி.டி., தங்களுக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த அறிக்கையை சட்டசபையில் தாக்கல் செய்தால் சிக்கல் ஏற்படும் என மாநில அரசு நினைப்பதாகவும் மகாராஷ்டிரா மாநில பா.ஜ., கூறியுள்ளது. எதிர்கட்சிகளின் புகார்கள் குறித்து மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிடம் கேட்டபோது, தணிக்கை துறை அறிக்‌கை தாக்கல் செய்த பின்னர் அது பற்றி கருத்து கூறுவதாக கூறினார்.

தணிக்கை துறை அறி்க்கையில், தேஷ்முக் தோற்றுவித்த மஞ்சாரா தொண்டு நிறுவனத்திற்கு, கடந்த 2005ம் ஆண்டில் பொர்வேலி பகுதியில் பல் மருத்துவ கல்லூரி நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், தொண்டு நிறுவனம் 6.5 கோடி ரூபாய் ஒதுக்க உத்தரவிடப்பட்டதாகவும், ஆனால் இந்த ஒதுக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு 30 கோடி ரூபாய் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் அந்த அறிக்கையில் மஞ்சாரா தொண்டு நிறுவனம் உட்பட 4 நிறுவனங்கள் நிலம் கேட்டு விண்ணப்பித்ததாகவும், ஆனால், நிலம் ஒதுக்குவதில் முதல்வர், எந்தவித காரணமும் இன்றி 3 தொண்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், மஞ்சாரா தொண்டு நிறுவனத்திற்கு முன்னுரிமை கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.



ஆனால் கடந்த 4 ஆண்டுகளாக பல் மருத்துவமனை கட்டப்படவில்லை. பின்னர் 2011ம் ஆண்டில் நிபந்தனையை மாற்ற வேண்டும் என தொண்டு நிறுவனம் ‌கல்வி நிறுவனம் தொடர்பாக ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இதனைதொடர்ந்து, பல் மருத்துவமனை அமைக்காததால், தொண்டு நிறுவனத்திடமிருந்து மாநில அரசு நிலத்தை திருப்பி பெறாததால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை துறையில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் பா.ஜ.,விடம் உள்ள அறிக்கையில், நிலம் ஒதுக்குவது தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சகன் புஜ்பால் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், நாஷக்கில் உள்ள அரசு பயன்பாட்டில் உள்ள நிலம் சகன் புஜ்பால் உறவினரான சமீர் புஜ்பாலுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலம் இரண்டு கட்டங்களாக 2003 மற்றும் 2009 ம் ஆண்டுகளில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட விலை குறைவானது என சுட்டிகாட்டபோதும், இந்த நிலம் ஒதுக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், முன்னாள் அமைச்சர் படாங்கரா காதம் தலைமையிலான பார்தி வித்யாபதி தொண்டு நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதாகவும், இதன் மூலம் அரசுக்கு 4 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

நேற்று,"திரைப்பட நகரம் அமைப்பதற்காக, விதிமுறைகளை மீறி 20 ஏக்கர் நிலம், உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை, மகாராஷ்டிரா அரசிடம், நீங்கள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்' என, பாலிவுட் இயக்குனர் சுபாஷ் கய்க்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.தனக்கு வேண்டப்பட்டவர் என்பதால், சுபாஷ் கய்க்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ் முக்கிற்கு கடும் கண்டனத்தை, நீதிபதிகள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தேஷ்முக் பதவி விலக பா.ஜ., வலியுறுத்தல்: நில ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., தேஷ்முக் பதவியில் நீடிக்க உரிமையில்லை. அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். அவர் பதவி விலக மறுத்தால் பிரதமர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளது.-DINAVIDIYAL!