சென்னை: நூறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஒரு நாள் சம்பளத்தை ரூ132 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை:
100 நாள் வேலைத் திட்டம் எனப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் ஊரக பகுதிகளில் திறன்சாரா, உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பமுள்ள, வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆண்டில் 100 நாட்களுக்கு குறையாமல் வேலைவாய்ப்பை அளிப்பதாகும். வறுமையை உருவாக்கும் காரணங்களாக உள்ள வறட்சி, காடுகள் அழிப்பு, மண் அரிப்பு போன்றவற்றை தடுக்கும் பணிகளை மேற்கொள்வதன் மூலம், இயற்கை ஆதாரங்களின் மேம்பாட்டினை உறுதி செய்து, நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவது குறிக்கோளாகும். மேலும், இத்திட்டத்தின் மூலம் நீர் ஆதாரங்களை பாதுகாத்தல், காடு வளர்ப்பு போன்ற பல்வேறு கிராம நலப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு இதுவரை ஊதியமாக ரூ119 நிர்ணயம் செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது. இதனை ரூ132 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன்பெறுவார்கள். -DINAVIDIYAL!