கோலாலம்பூர்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஆலன்ஐசக் நியமிக்கப்பட்டார். ஐ.சி.சி. எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக சரத்பவார் உள்ளார். இவரது பதவிக்காலம் நிறைவடைகிறது. இதைத்தொடர்ந்து புதிய தலைவராக நியூசிலாந்து நாட்டைச்சேர்ந்த ஆலன் ஐசக் நியமிக்கப்பட்டார்.
ஐ.சி.சி.யின் வருடாந்திரக்குழுக் கூட்டம் மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த வியாழன் அன்று நடந்தது. இதில் ஐ.சி.சி.யின் நிர்வாகிகள் நியமனம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதில் தற்போதைய தலைவராக உள்ள சரத்பவார் மற்றும் நிர்வாக அதிகாரி ஹரூன்லகார்ட் ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைவதையொட்டி புதிய நிர்வாகிகளாக, ஆலன்ஐசக், தலைவராகவும், நிர்வாக தலைமை அதிகாரியாக டேவிட் ரிச்சர்ட்சனும் நியமிக்கப்பட்டனர்.இவர்கள் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை பதவியில் இருப்பர்.

-DINAVIDIYAL!