HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Sunday, 24 June 2012

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். சீட் விலை என்ன?

சென்னை: மருத்துவப் படிப்பிற்கான அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விரைவில் கலந்தாய்வு துவங்க உள்ள நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எம்.பி.பி.எஸ்., சீட், 40 லட்சம் ரூபாய் வரை விலைபோவதாக மாணவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
உயர்கல்வியில் இன்றும், மாணவர்களின் முதல் தேர்வாக மருத்துவப் படிப்பு உள்ளது. ஆனால், பொறியியல் படிப்பை ஒப்பிடும்போது, மருத்துவப் படிப்பிற்கு, அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மிகக் குறைவு.
தமிழகத்தில் மொத்தம் 39 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு நீங்கலாக, 1,653 எம்.பி.பி.எஸ்., இடங்கள், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலையின் கீழ் இயங்கும் 14 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக 829 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைகள் மற்றும் பல்வேறு அறக்கட்டளைகளின் கீழ்வரும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,050 இடங்களும் உள்ளன.
கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், அரசு மருத்துவக் கல்லூரிகள் அல்லது தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டில், எம்.பி.பி.எஸ்., "சீட்&' கிடைக்கப் பெற்ற விண்ணப்பதாரர்கள் போக, மீதி மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டில் சீட் பெற வேண்டியுள்ளது.
கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மாணவர் மற்றும் பெற்றோரின் முன்னுரிமை உள்ளிட்டவை அடிப்படையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள், "ஏ&', "பி&', "சி&', என, பிரிக்கப்படுகின்றன. "ஏ&' கிரேடு கல்லூரிகளில் 40 லட்சம் ரூபாய் வரையும், "பி&' கிரேடு கல்லூரிகளில் 35 லட்சம் ரூபாய் வரையும், "சி&' கிரேடு கல்லூரிகளில் 30 லட்சம் ரூபாய் வரையும், எம்.பி.பி.எஸ்., "சீட்&' விலைபோவதாக, தனியார் மருத்துவக் கல்லூரி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எம்.பி.பி.எஸ்., "சீட்&' கேட்டு தங்களைத் தொடர்பு கொள்வோருக்கு, தனியார் கல்லூரி நிர்வாகத்தினர் தொலைபேசியில் எந்த பதிலும் அளிப்பதில்லை. நேரில் அழைத்துப் பேசி, பேரம் படிந்தால், "சீட்&' தருகின்றனர். தொகை அதிகம் என்பதால், கல்லூரி நிர்வாகம், பெற்றோர் இரு தரப்பினரும், இடைத் தரகர்களை பெரும்பாலும் விரும்புவதில்லை.
இதுகுறித்து, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை தேர்வுக்குழு செயலர் சுகுமார் கூறும் போது, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு முடிந்த பின்னரே, நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என தனியார் கல்லூரிகளை நிர்பந்திக்க முடியாது. இந்த இடங்களை அவர்களின் விருப்பப்படி எப்போது வேண்டுமானாலும் நிரப்பிக் கொள்ளலாம் என்றார்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில், லட்சக்கணக்கில் பணம் கொடுத்து எம்.பி.பி.எஸ். சீட் பெற முடியாதவர்களுக்கு அடுத்த தேர்வாக பி.டி.எஸ். படிப்பு உள்ளது. இந்த ஆண்டு, தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., சீட்டிற்கு, 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகத் தெரிகிறது.


-DINAVIDIYAL!