பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.82 உயர்த்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது.
இந்த மாதத்தில் மூன்றாவது முறையாக பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. உள்ளூர் வரிகள் சேர்த்து சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.2.32 அதிகரித்து ரூ.71.72 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். இதனால் பெட்ரோலுக்கான இறக்குமதி செலவு அதிகரித்துள்ளது. சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப 15 நாள்களுக்கு ஒருமுறை பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி வருகின்றன.
முன்னதாக ஜூன் 1-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் உயர்த்தப்பட்டது. ஜூன் 16-ல் ரூ.2 உயர்த்தப்பட்டது. ஜூன் 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாகவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
-DINAVIDIYAL!