பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட், கடந்த 2010–ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரி
ன் போது, பணம் பெற்றுக் கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கைது செய்யப்பட்டு சிறைவாசத்தை அனுபவித்த அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) 10 ஆண்டு காலம் விளையாட தடை விதித்துள்ளது.
ஆனால் தான் எந்த தவறும் செய்யவில்லை. ஒரு அப்பாவி என்று சல்மான்பட் சொல்லி வந்தார். இந்த நிலையில் முதல் முறையாக சூதாட்டத்தில் ஈடுபட்டதை சல்மான்பட் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் ‘ஐ.சி.சி.யின் தீர்ப்பாயத்தின் முடிவை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது நடவடிக்கையால்(சூதாட்டம்) ஏமாற்றத்திற்குள்ளான அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இது கிரிக்கெட் நலனுக்கு எதிரானது.’ என்று குறிப்பிட்டுள்ளார். மீண்டும் கிரிக்கெட் விளையாட விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.
-DINAVIDIYAL!