இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ரூ.354 கோடி வரி பாக்கி வைத்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் வருமான வரித் துறையிடம் இருந்து இத்தகவல் பெறப்பட்டுள்ளது.
2007-08-ம் ஆண்டில் இருந்து 2010-11-ம் ஆண்டில் இந்த வரி பாக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளிலும் பிசிசிஐ வரி பாக்கி வைத்திருக்கலாம். ஆனால் அது தொடர்பான முழு விவரங்கள் கிடைக்கவில்லை. ஆச்சரியப்படத்தக்க வகையில் கடந்த இரு ஆண்டுகளாக பிசிசிஐ செலுத்த வேண்டிய வரி பாக்கி எவ்வளவு என்பதை வருமான வரித்துறை இதுவரை கணக்கிடாமலேயே உள்ளது.
2010-11-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் வருவாய் ரூ.874.18 கோடி. இதற்கான வரி ரூ.337.11 கோடி. ஆனால் ரூ.170 கோடி மட்டுமே வரி வசூலிக்கப்பட்டுள்ளது.
2009-10-ம் ஆண்டில் பிசிசிஐ-யின் வருவாய் 964.18 கோடி. இதற்கு ரூ.413.59 கோடி வரி செலுத்த வேண்டும். ஆனால் ரூ.307.50 கோடி மட்டுமே பிசிசிஐ வரி செலுத்தியுள்ளது. -DINAVIDIYAL!