HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Saturday, 29 June 2013

இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி : பாக்., அதிரடி முடிவு

கொழும்பு: இலங்கை ராணுவ அதிகாரிகளு்க்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதற்க எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் பாக்.ராணு
வம் பயிற்சி அளிக்க முன் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனவர்கள் மீது தாக்குதல்:


தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களான ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை போன்ற பகுதிகளை சேர்நத மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் இந்தியகடல் எல்லைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கை கப்பல் ப‌டை‌ வீரர்கள் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துதல், மீன்களை பறிமுதல் செய்தல், படகுகளில் உள்ள நவீன உபகரணங்களை பறிமுதல் செய்வது மட்டுமல்லாமல், நீரில் மூழ்கடிக்கும் சம்பவங்கள் தொடர்நது ந‌டத்தி வருகி்னறன.
ராணுவத்தினருக்கு பயிற்சி :


மேற்கண்ட நிகழ்வுகள் தினந்தோறும் ந‌ைடெபற்றுக்கொண்டிருந்த போதிலும் இலங்கை ராணுவ வீரர்களுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து தமிழகத்தின் நீலகரி மாவட்டத்தில் உள்ள வெலிங்டன் ராணுவபயிற்சி மையத்தில் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனைதொடர்ந்து இலங்கை ராணுவ வீரர்களுக்கு வேறு மாநிலங்களில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டது. 
பாக்., ராணுவம் ஆதரவு:


இந்தியாவில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி மறுக்கப்பட்ட நிலையில் பாக்., ராணுவம் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீன நாட்டிற்கு சொந்தமான இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்படுவதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ராணுவ தலைமை அதிகாரி அஸ்பக் பர்வேஸ் க‌‌யானி இலங்கைக்கு நல்லெண்ண பயணமாக மேற்கொண்டுள்ளார். அவர் தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை ராணுவத்தின் தலைமை அதிகாரியான ஜகத் ஜெயசூர்‌யாவைசந்தித்து பேசினார். அப்போது இரு நாடுகளிடையே ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது மற்றும் ராணுவ ஒத்துழைப்பு நல்குவது உட்பட ‌பல்வேறு விசயங்கள் குறித்து பேசப்பட்டது. 
மேலும் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு தேவையான பயி்ற்சியை பாகிஸ்தானில் மேற்‌கொள்வது என முடிவானதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் பயிற்சி மறுக்கப்பட்ட நிலையில் நமது எதிரி நாடான பாக்,ராணுவம் பயிற்சிஅளிக்க முன்வந்திருப்பது நடுநிலையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. -DINAVIDIYAL!