சென்னை,
சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2011–ம் ஆண்டு பிப்ரவரி 7–ந்தேதி தொடங்கப்பட்டு அன்று முதல் பணிகள் நடைபெற்று வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணாசாலை வழியாக விமான நிலையம் வரை 23 கி.மீ நீளத்துக்கு ஒரு வழித்தடம் அமைக்கப்படுகிறது. 2–வது வழித்தடம் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக புனித தோமையார் மலை வரை 22 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்டு வருகிற
து.
இதில் முதல் வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை வழியாக சைதாப்பேட்டை வரையிலும், 2–வது வழித்தடத்தில் பெரியார் ஈ.வெ.ரா. சாலை முதல் அண்ணா நகர் 2–வது அவென்யூ வரை சுரங்க பாதையாகவும், மீதம் உள்ள பகுதிகள் உயர்மட்ட பாலமாகவும் அமைக்கப்பட்டு வருகிறது.
மொத்தம் 24 கி.மீ நீளம் உள்ள சுரங்க பாதையில் மட்டும் 19 சுரங்க ரெயில் நிலையங்கள் கட்டப்படுகின்றன. லார்கன் அண்டு டுப்ரா மற்றும் சாங்கய் அர்பன் கன்ஸ்ட்ரக்ஷன் குரூப் கூட்டு நிறுவனங்கள் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
சுரங்கப்பாதை அமைக்கும் இடங்களில் ஜப்பான் நாட்டு என்ஜினீயர்களின் மேற்பார்வையில் டர்னல் போரிங் இயந்திரங்கள் மூலம் சுரங்கம் தோண்டப்பட்டு வருகிறது. இதில் இதுவரை 6 கி.மீ. தூரம் வரை சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மற்ற பகுதிகளில் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் செலவு ஆரம்பத்தில் ரூ.14 ஆயிரத்து 500 கோடி என மதிப்பிடப்பட்டது. ஆனால் கடந்த 3 ஆண்டில் பல்வேறு பொருட்களின் விலை உயர்வு காரணமாக திட்டச் செலவுகளின் மதிப்பு அதிகரித்து இப்போது ரூ.18 ஆயிரம் கோடியாக செலவு அதிகரித்துள்ளது.
இங்கு வேலை பார்க்கும் 5 ஆயிரம் பணியாளர்களில் 500–க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாட்டு என்ஜினீயர்கள். இவர்களுக்கு சம்பளம் அமெரிக்க டாலரில் வழங்கப்படுகிறது.
மெட்ரோ ரெயில் திட்ட பணிகளில் கோயம்பேடு–கிண்டி இடையே உயர்மட்ட பாலத்தில் 7 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் போடப்பட்டுள்ளது. இன்னும் 4 கி.மீ. தூரத்துக்கு தண்டவாளம் அமைக்கப்பட வேண்டும். இது தவிர ரெயில் நிலையம் கட்டும் பணிகளும் முழுமை பெற வேண்டும்.
இவை அனைத்தையும் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்து வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். அதன் பிறகு 2014–ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து வழக்கமாக ரெயில் ஓடத் தொடங்கும். கண்ட்ரோல் ரூம் மூலம் இயக்கப்பட்டு டிரைவர் இல்லாமலேயே ரெயில் ஓடும். ஆனாலும் பெயரளவில் எமர்ஜென்சிக்காக டிரைவர் அமர்ந்திருப்பார். DINAVIDIYAL!