சென்னை, ஆக. 31–
சென்னையில் கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் கல்லூரி, தியாகராய கல்லூரி மாணவர்கள் திடீர், திடீரென உருட்டுக் கட்டைகளுடன் ரோட்டுக்கு வந்து ரவுடிகள் போல் வன்முறையில் ஈடுபடுவதால் இவர்களை கட்டுப்படுத்த கல்லூரி முதல்வர்கள் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் கூடுதல், கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் பங்கேற்று வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியை விட்டு நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்லூரி முதல்வர்களுக்கு யோசனை வழங்கினர்.
இதை கல்லூரி முதல்வர்கள் ஏற்றுக் கொண்டனர்.
இதைத் தொடர்ந்து பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் 3 பேர் வன்முறையில் ஈடுபட்ட காரணத்திற்காக கல்லூரியை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.
இதே நடவடிக்கை நந்தனம் கல்லூரியிலும் எடுக்கப்பட்டது.
இது குறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், மாணவர்களை படிப்பதற்காகத்தான் பெற்றோர்கள் கல்லூரிக்கு அனுப்புகிறார்கள். ஜாலிக்காக அல்ல.
இளமைப் பருவம் என்பதால் சில குறும்புத் தனம் இருக்கத் தான் செய்யும். அது அளவாகத்தான் இருக்க வேண்டும்.
ஆனால் சில மாணவர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் போது அவர்களுக்கிடையே மோதல் உருவாகிறது.
கடந்த மாதம் 27–ந்தேதி நந்தனம் கல்லூரி மாணவர்களும், நியூ கல்லூரி மாணவர்களும் தடியுடன் திரண்டு மோதிக் கொண்டனர். இதே போல் தியாகராய கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்டதுடன் பஸ் கண்டக்டரையும் தாக்கி உள்ளனர். பிரசிடென்சி கல்லூரி மாணவர்கள் கடந்த 14–ந் தேதி இரு பிரிவாக மோதிக் கொண்டதால் பஸ்சையும் அடித்து நொறுக்கி விட்டனர்.
சத்யபாமா கல்லூரி மாணவர்கள் கடந்த 2–ந் தேதி இரு பிரிவாக மோதிக் கொண்டனர். இப்படி மாணவர்கள் மோதிக் கொள்ளும் போது ரத்தக் களறி ஏற்பட்டு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் சூழ்நிலை நடக்கிறது.
இதை தவிர்க்கத்தான் மோதலில் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளோம்.
பஸ் தினம் கொண்டாட கோர்ட்டு தடை விதித்த சூழலில் இவர்கள் அதையும் மீறி பஸ் தினம் கொண்டாடி வன்முறையாக மாற்றுகிறார்கள். இதை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் நியூ கல்லூரி பிரசிடென்சி கல்லூரி, நந்தனம் கல்லூரி, குருநானக் கல்லூரி, பச்சையப்பா கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரி மாணவர்களில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதை விளக்கி கூறினர்DINAVIDIYAL!