சென்னை விமான நிலையம் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புதிய விமான முனையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை செய்து வருகின்றனர்.
விமான நிலையத்திற்கு வெளிப்பகுதியில் உள்ள பாதுகாப்புகளை தமிழக போலீசார் செய்து வருகிறார்கள். பயணிகள் போல தீவிரவாதிக
ள் ஊடுருவல், ஆள் கடத்தல், திருட்டு, வழிப்பறி போன்ற சம்வங்கள் விமான நிலையத்தில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் பாதுகாப்பு பலப்படுத்த நவீன கேமிராக்கள் பொறுத்தப்படுகின்றன.
விமான நிலைய வளாகத்தில் முக்கிய பகுதிகளில் 41 சி.சி. டி.வி., கேமிராக்கள் பொறுத்தப்பட்டு வருகின்றன.
விமான நிலைய வளாகத்தில் எது நடந்தாலும் இதில் துல்லியமாக படம் பதிவாகி விடும். இந்த நவீன கேமிராக்கள் மற்றும் விமான நிலைய புதிய போலீஸ் நிலையம் ஆகியவை 10–ந்தேதி திறக்கப்படுகிறது.
இதற்கிடையில் பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை மற்றும் உள்நாட்டு முனையத்தின் வருகை பகுதியில் போலீஸ் பூத் இரண்டு அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பூத்திலும் 4 கேமிராக்கள் விதம் 8 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. இந்த பூத் மூலம் 24 மணி நேரமும் பயணிகள் கண்£ணிக்கப்படுவார்கள்.
போலீஸ் பூத் திறப்பு விழா இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. போலீஸ் கூடுதல் கமிஷனர் ராஜேஷ்குமார் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சியில் இணை கமிஷனர் திருஞானம், துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் மகிமை வீரன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்-DINAVIDIYAL!