HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 September 2013

இந்தியாவில் குடிநீர் பிரச்சினையில் சிக்கி தவிக்கிறது 22 நகரங்கள்

புதுடில்லி : இந்த‌ியாவில் உள்ள 32 முக்கிய பெரும் நகரங்களில் இன்று 22 ‌நகரங்களுக்கு அன்றாட தண்ணீர் தேவை பற்றாக்குறை இருக்கிறது. இந்திய அரசுக்கு இப்பிரச்சினை வேகமாக வளர்ந்து வரும் முக்கிய பிரச்சினையாகும்.இதில் மிகவும் மோசமான பாதிப்பு உள்ளான நகரம் ஜாம்ஷெட்பூர் ஆகும்.ஏறக்குறைய இங்கு மக்களுக்கு தேவையான தண்ணீரும் கிடைக்கின்ற தண்ணீர் அளவையும் கணக்கிட்டு பார்த்தால் 70 சதவீத பற்றாக்குறை இருந்து வருகிறது.கான்பூர், அசான்சோல், தன்பாத், மீரட், பரிதாபாத், விசாகபட்டினம், மதுரை மற்றும் ஐதராபாத் ஆகிய முக்கிய நகரங்களில் கடுமையான பற்றாக்குறை உள்ள நகரங்களாக உள்ளன. இதில் 30 சதவீத தேவையை பூர்த்தி செய்ய இயலவில்லை.
உதாரணமாக, டில்லியின் தேவை 4,158 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவை என்றால் 3,156 மில்லியன் லிட்டர் தான் அளிக்கப்படுகிறது. அதாவது 40 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதாக அரசு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.இன்னொரு புள்ளி விபரம் என்ன சொல்கிறது என்றால் பெரும்பாலான நகரங்‌களுக்கு போதுமான தண்ணீர் உள்ளதாகவும் தண்ணீரை பொறியாளர்கள் சரியானபடி பராமரிக்காத காரணத்தினால் இப்பிரச்சினை ஏற்படுவதாக சொல்கிறது அப்புள்ளி விபரம்.



             இது குறித்து குடிநீர் வள மோலாண்மை அதிகாரி திலிப் ‌பவுஷ்தர் கூறுகையில், மற்ற பெரிய நகரங்களுடன் ஒப்பிடுகையில் மு‌ம்பையில் நல்ல மழை பெய்கிறது.இதில் சிறிது தான் விவசாயத்திற்கு பயன்‌படுகிறது.தண்ணீர் பற்றாக்குறையை இந்நகரம் மழை நீர் சேகரிப்பு செய்யாமல் தண்ணீர் வீணாகிறது. இதை சரியாக செய்தால் தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கலாம் என்றார்.மேலும் ஜாம்ஜெட்பூர், தன்பாத் மற்றும் கான்பூரில் அதிகரிக்கும் மக்கள் தொகை பெருக்கம் தண்ணீர் தேவையை அதிகரிக்கிறது.
எடுத்துக்காட்டாக குர்கானில் பெரிய அளவிலான ‌குடீநீர் கால்வாய்கள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15-20 வருடங்களுக்கு பிறகு கட்டப்பட்டது.குடிநீர் ஆதாரமாக தண்ணீ்ர் தேவையை பூர்த்தி செய்கிறது.மொத்தத்தில் இந்தியாவில் தினசரி தண்ணீரை முறையாக பயன்படுத்தினால் 90 சதவீத தேவையை பூர்த்தி செய்யலாம். தண்ணீ்ரை வீணாக்காமல் வழங்கினாலே பற்றாக்குறையை தவிர்க்கலாம்.உதாரணமாக கொச்சியில் தினசரி குடிநீர் தேவை 247 மில்லியன் லிட்டர். ஆனால் அங்கு 250 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது.இதே போல் தண்ணீரின் தேவையை விட குடீநீர்அதிகமாக 10 நகரங்களில் வழங்கப்படுகிறது. இதில் நாக்பூர் முதலிடம் வகிக்கிறது.-DINAVIDIYAL!