HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Monday, 9 September 2013

உ . பி., கலவர பதட்டம் : 26 பேர் பலி - ராணுவத்தை அழைத்தது அகிலேஷ் அரசு

லக்னோ: உ . பி., மாநிலத்தில் இரு தரப்பினர் மோதிக்கொண்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை26 -ஐ தொட்டது, மேலும் கலவரம் பரவாமல் தடுக்க முஷாபர் மாவட்டம் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாரால் கட்டுப்படுத்த முடியாமல் போனது அகிலேஷ் அரசின் சட்டம் ஒழுங்கு குறித்து மேலும் விமர்சனத்திற்குள்ளாகி யிருக்கிறது.
உ . பி.,யில் கடந்த முறை நடந்த தேர்தலில் முலாயம்சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்தது. கடந்த மாயாவதி ஆட்சியில் இங்கு சட்டம் ஒழுங்கு கெட்டுப்போனது. இதனை மேம்படுத்தும் கவனத்தில் எனது முதல் பணியாக இருக்கும் என முதல்வராக பொறுப்பேற்ற அகிலேஷ் யாதவ் முதல் பேட்டியில் தெரிவித்திருந்தார். இன்று ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டை கடந்து நிற்கிறது. ஆனால் இங்கு சமீபத்திய மோதல்கள் பெருகியே வருகிறது. கடந்த சில மாதங்களாக கொலைகள் பெருகி வருகின்றன. குறிப்பாக ஒரு போலீஸ் எஸ். பி., ஒருவர் கொலை செய்யபப்பட்டார். இதில் ஆளும் கட்சியினரே தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது. மேலும் ஆங்காங்கே மோதல்கள், கலவரம் வெடித்து வருகிறது.


               முஷாபர் நகரில் நேற்று இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இதில் டி . வி., பத்திரிகையாளர் உள்பட இது வரை இரு தரப்பிலும் மொத்தம் 26 பேர் பலியாகி இருக்கின்றனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்னும பதட்டம் நீடிப்பதால் ராணுவம் வரவழைக்கப்பட்டது. 38 துணை ராணுவ படையினர் உள்பட மொத்தம் ஆயிரம் பேர் மீரட்டில் இருந்து கலவர பகுதிக்கு அனுப்பி வைக்ககப்பட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

              ஆரம்ப கட்ட நடவடிக்கை எடுக்காதது ஏன் ? முஷாபர்நகரை பொறுத்த வரை கவால் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக இரு தரப்பினர் இடையே மோதல்கள் மற்றும் கொலைகள் நடந்துள்ளன. மேலும் இங்கு அமைதியை குலைக்கும் விதமாக பேசிய அரசியல் தலைவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பகுதியில் எதிர்கட்சியான மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி., மற்றும் 2 எம். எல்.ஏ.,க்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஒரு பா.ஜ., எம். எல்.ஏ.,வும் உண்டு.
இந்த பகுதியை பொறுத்தவரை இரு தரப்பினர் மோதிக்கொண்டதை அடுத்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க அகிலேஷ் அரசு தவறி விட்டது என இப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர் .இதனை ஆரம்ப கட்டத்திலேயே கவனத்தில் எடுத்து ஒரு சமரச பேச்சு நடத்தி கலவரத்தை வளர்க்க விடாமல் பார்த்து கொண்டிருக்கலாம். ஆனால் அகிலேஷ் அரசு பாதிக்கப்பட்டோருக்கு தற்போது நிவாரணம் அறிவித்து மக்களை சரிப்படுத்த முயற்சிக்கிறது என உள்ளூர் கட்சி பிரமுகர் ஒருவர் கூறினார். கலவரம் குறித்து முழுவிவரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளது. -DINAVIDIYAL!