HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

தீபாவளிக்கு ‘ஆரம்பம்’; பொங்கலுக்கு ‘வீரம்’: அஜீத்

அஜீத் தன் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து படைக்கவிருக்கிறார் தீபாவளிக்கு அவரின் ‘ஆரம்பம்’- ரிலீஸ். அடுத்த ஆண்டு (2014) பொங்கலுக்கு அவரின் ‘வீரம்’ ரிலீஸ்.

‘ஆரம்பம்’- தலைப்பு அறிவிக்கப் பட்ட நாள் முதல் இப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, படத்தின் ரிலீஸ் தேதியை பற்றிய செய்திகள் பல யூகங்களாக வெளி வந்தது. படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இது குறித்து பேசுகையில்,
‘ஆரம்பம்’- அஜீத் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி விருந்தாக இருக்கும். படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் படத்தை மெருகேற்றும் இறுதி கட்ட வேலைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா வின் இசை, மிக பெரிய அளவில் பேசப்படும். ஆரம்பம் படத்தின் இசை வெளியீட்டை குறித்த தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்றார்.
இன்றைய நிலவரப்படி, தீபாவளிக்கும், பொங்கலுக்கும் 2 பெரிய ஹீரோக்களின் படங்கள் வருவது, அதனதன் தயாரிப்பாளர்களாலேயே உறுதி செய்யப்பட்டு விட்டது.
‘பருத்தி வீரன்’ கார்த்தியின் ‘ஆள் இன் ஆள் அழகு ராஜா தீபாவளிக்கும், ‘பிரியாணி’ பொங்கலுக்கும் வரவிருப்ப தாக அதனை வெளியிடும் ஸ்டூடியோஸ் க்ரீன் அதிபர் ஞானவேல் ராஜா அறிவித்துள்ளது நினைவிருக்கலாம்DINAVIDIYAL!