ஓய்வு பெறுவதற்கு தற்போது என்ன அவசரம் என்று இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவின் லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர், இதுவரையிலும் 198 போட்டிகளில் விளையாடி உள்ளார்.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது.
இந்த அணியுடனான 2 டெஸ்ட் போட்டிகளில் சச்சின் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே 200வது போட்டிகளுக்கு முன் சச்சின் ஓய்வு பெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இதுகுறித்து மனம் திறந்துள்ள சச்சின், தற்போது நான் ஓய்வு பெறுவதற்கு என்ன அவசரம்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் சச்சினை கிரிக்கெட்டின் கடவுள் என்று குறித்த கேள்விக்கு, நான் கிரிக்கெட் விளையாடுகிறேன் அவ்வளவு தான், நான் கடவுள் கிடையாது என்று பதிலளித்துள்ளார்.