புதுடில்லி: உ . பி., மாநில கலவரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் அகிலேஷூடன் பேச்சு நடத்தினார். உ . பி., கலவரம் குறித்து பிரதமர் மன்மோகன்சிங் முதல்வர் அகிலேஷ் யாதவுடன் போனில் பேசினார். அமைதியை நிலைநாட்ட முழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த சம்பவத்திற்கு தாம் கண்டனம் தெரிவித்ததுடன், அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் முதல்வருக்கு உறுதி அளித்துள்ளார்.
உ . பி. , மாநிலத்தில் தொடர்ந்து ஒரு வார காலமாக நடந்து வரும் மோதலில் இது வரை மொத்தம் 29 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதல் அகிலேஷ் அரசின் செயலற்ற தன்மையை காட்டுவதாக கவர்னர் உள்பட எதிர்கட்சியினர் குறை கூறியுள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க தவறிய மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
முஷாப்பூர்நகர் பகுதியில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பெண்களை கேலி செய்ததால் இரு தரப்பில் மோதல் ஏற்பட்டது . இது கடந்த 28ம் தேதி 3 பேர் கொலை செய்யப்பட்டனர் . இதனை தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த மோதல் கலவரமாக உருவெடுத்தது. இதில் 29 கொல்லப்பட்டுள்ளனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். மேலும் கலவரம பரவாமல் தடுக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் துணை ராணுவ படையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று போலீஸ் கூடுதல் டைரக்டர் ஜெனரல் நிருபர்களிடம் கூறுகையில்: இந்த மோதல் தொடர்பாக 90 பேர் கைது செய்ப்பட்டுள்ளனர். தற்போது நிலைம கட்டுக்குள் இருக்கிறது. ஊரடங்கு முழு அமைதி ஏற்படும் வரை ஊரடங்கு தொடரும் என்றார்.
அகிலேஷ் அரசை டிஸ்மிஸ் செய்க; பா.ஜ., மற்றும் பகுஜன் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் 40 பேர் வழக்கு பதியப்பட்டுள்ள. இதற்கு மாயாவதி கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். இங்கு கலவரத்தை ஒடுக்க மாநில அரசு தவறி விட்டது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க அரசு தவறி விட்டது. இங்கு மனித நேயம் புறந்தள்ளப்பட்டுள்ளது. அகிலேஷ் அரசு அனைத்து தரப்பிலும் தோல்வி அடைந்து விட்டது. இங்கு எமர்ஜென்ஸி பிரகடனப்படுத்தப்பட வேண்டும். அரசை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வரவேண்டும். இவ்வாறு மாயாவதி கூறினார்.
பா.ஜ., குழு உ .பி., விரைகிறது:
இந்த கலலவரம் பாதித்த உ .பி., மாநிலத்திற்கு ரவிசங்கர் பிரசாத் தலைமையிலான குழு செல்கிறது. இது குறித்து அவர் கூறுகையில், நாங்கள் அங்கு அமைதி ஏற்படுத்த விரும்புகிறோம். இது வரை 100 க்கும் மேற்பட்ட கலவரங்கள் நடந்துள்ளன. ஆனால் அகிலேஷ் அரசு உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டது. இது அரசின் தோல்வியை தான் காட்டுகிறது. என்றார்.
அஜீத்சிங்- ரவிசங்கர் பிரசாத் தடுத்து நிறுத்தம்: கலவரம் பாதித்த பகுதிகளில் பார்வையிட சென்ற ராஷ்ட்டிரிய லோக்தள தலைவர் அஜீத்சிங் மற்றும் பா.ஜ.,செய்தி தொடர்பாளர்களில் ஒருவரான ரவிசங்கர் பிரசாத் மற்றும் பா.ஜ., பிரமுகர்கள் தடுத்தி நிறுத்தி வைக்கப்பட்டனர்,
தாய் உயிருக்கு போராட்டம்: கலவரம் பாதித்த பகுதியில் இருந்து காயமுற்றவர்கள் முஷாப்பூர்நகர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் படுகாயமுற்ற 35 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உயிருக்கு போராடுகிறார். இவரது இரண்டு பச்சிளம் குழந்தைகள் அருகில் உள்ள பெட்டில் ரத்த காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறது. இந்த நிலைக்கு யார் பொறுப்பு ?
-DINAVIDIYAL!