புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங்கை சி.பி.ஐ.,விரும்பினால் விசாரிக்கட்டுமே இதில் என்ன தவறு இருக்கிறது ? தேவைப்பட்டால் ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறார் என பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் வெளிப்படையாக கூறியிருப்பது சக அமைச்சர்கள் மற்றும் காங்கிரசை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சக அமைச்சர் ஒருவரே இவ்வாறு பேசுவது பிரதமரை வலுக்கட்டாயமாக சி.பி.ஐ.,வலைக்குள் தள்ளி விடுவதற்கு சமமாகாதோ என காங்., நிர்வாகிகள் கமல்நாத்தை மறைமுகமாக
சாடியுள்ளனர்.
நிலக்கரி ஊழல் விவகாரத்தில் தமக்கு தொடர்பு இல்லை என்றும், ஆவணங்கள் மாயமாகி போனதற்கும் தான் பொறுப்பல்ல என பல முறை பிரதமர் மன்மோகன்சிங் கூறி வந்துள்ளார். ஆனால் பிரதமரே பொறுப்பு என எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன .
சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்: இந்நிலையில் பார்லி., விவகாரத்துறை அமைச்சர் கமல்நாத் நிருபர்களிடம் கூறுகையில்: நிலக்கரி முறைகேட்டில் சி.பி.ஐ.,யிடம் இருந்து முறையான அழைப்பு வந்தால், பிரதமர் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறார். ஏன் கூடாது ? சட்டத்திற்கு முன் அனைவரும் சமம்தானே, பிரதமர் உள்பட எல்லோரும் சட்டத்திற்குட் பட்டவர்கள் தானே ? சி.பி.ஐ., சட்டத்திற்குட்பட்டு யாரை வேண்டுமானாலும் விசாரணை நடத்த முடியும். இவ்வாறு கமல் நாத் கூறியுள்ளார்.
-DINAVIDIYAL!