HAPPY PONGAL WISHES

WELCOME TO DINAVIDIYAL...fast online tamil news network...

Thursday, 5 September 2013

சென்னையில் இருந்து கொழும்புக்கு தப்பிச்செல்ல முயன்ற கடத்தல்காரர் கைது

ஆலந்தூர், செப்.5-

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து கொழும்பு வழியாக துபாய்க்கு விமானம் செல்ல இருந்தது. அதில் செல்ல வந்த பயணிகளை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.



அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த ஜலந்தர் (வயது 40) என்பவரது பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஜலந்தர், கடந்த சில மாதங்களாக பல்வேறு கடத்தல் வழக்குகளில் டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளால் தேடப்பட்டு வருபவர் என தெரியவந்தது.

இதையடுத்து ஜலந்தரின் விமான பயணத்தை ரத்து செய்த அதிகாரிகள், அவரை தனியறையில் அடைத்தனர். மேலும் ஜலந்தர் பிடிபட்டது குறித்து டெல்லி சுங்கத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.





DINAVIDIYAL!