ரிசர்வ் வங்கியின் 23வது கவர்னராக, நேற்று பொறுப்பேற்ற, ரகுராம் ராஜன், "நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள போதிலும், பொருளாதார கட்டமைப்பு வலுவாக உள்ளது' என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக, ரகுராம் ராஜன் நேற்று பதவியேற்றார். கடந்த ஐந்து ஆண்டு களாக, ரிசர்வ் வங்கி கவர்னராக பதவி வகித்த டீ.சுப்பாராவ், ரகுராம் ராஜனை கட்டித் தழுவி, பிரியா விடை பெற்றார்.
பொருளாதார ஆலோசகர்:
பன்னாட்டு நிதியத்தின், முன்னாள் தலைமை பொருளாதார நிபுணரான ரகுராம் ராஜன், 2008ம் ஆண்டு சர்வதேச நிதி நெருக்கடி குறித்து முன்கூட்டியே கணித்து கூறியவர்.இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.சென்ற ஆகஸ்ட் மாத துவக்கத்தில், சுப்பாராவிற்கு பின், ரிசர்வ் வங்கியின், கவர்னராக பொறுப்பேற்பார் என, நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டார். அவர், பதவியேற்க மூன்று வாரங்கள் உள்ள நிலையில், ரிசர்வ் வங்கியின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.நாட்டின் மந்தமான பொருளாதார வளர்ச்சி, ரூபாய் மதிப்பு சரிவு, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பு போன்ற பல்வேறு சவால்களை ரகுராம் ராஜன் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ், நேற்று விடைபெறும்போது, ""நெருக்கடியான இத்தருணத்தில், ரிசர்வ் வங்கியின் தலைமை பொறுப்பிற்கு, இவரை விட தகுதியானவர் நாட்டிற்கு கிடைக்க முடியாது,'' என்று தெரிவித்தார்.
நடவடிக்கை:
இதையடுத்து, செய்தியாளர்கள் கூட்டத்தில் ரகுராம் ராஜன் பேசியதாவது:நாடு பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி கவர்னராக பொறுப்பேற்க இது சாதாரண தருணம் அல்ல. அதே சமயம், இந்திய பொருளாதாரத்தின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளது.ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதே சமயம், ரூபாயை பராமரிப்பது ஒன்றே ரிசர்வ் வங்கியின் பணி என எடுத்துக் கொள்ள முடியாது. வளர்ச்சி, மேம்பாடு மற்றும் நிதியை ஸ்திரமாக வைத்திருப்பது போன்ற பல பணிகள் உள்ளன.நிதிச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் உள்ளன. ஒருவித ஸ்திரமற்ற தன்மை நிலவுகிறது என்பதை ரிசர்வ் வங்கி மறுக்கவில்லை. ரிசர்வ் வங்கி கொள்கை களை உருவாக்குவதில் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும். விரைவாகவும், பரவலான வளர்ச்சியை கருத்தில் கொண்டும் செயலாற்றுவது அவசியம்.
நிதி ஆய்வு கொள்கை:
வங்கிகள் தாராளமாக கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். முதலீட்டாளர்கள், ரூபாய் வாயிலாகவே பரிவர்த்தனை மேற்கொள்ள வழி வகை காணப் படும். வரும் 20ம் தேதி, ரிசர்வ் வங்கியின் நிதி ஆய்வுக் கொள்கை வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
ரகுராம் ராஜன் பின்னணி...:
ரகுராம் ராஜன், மத்திய பிரதேசம் போபால் நகரில், 1963 பிப்., 3ல் பிறந்தார். டில்லி ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., பட்டமும், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,ல் எம்.பி.ஏ., பட்டமும் பெற்றார். பின் அமெரிக்காவின் எம்.ஐ.டி.,யில் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பை முடித்தார். சிகாகோ பல்கலைக் கழகம், எம்.ஐ.டி., ஆகியவற்றில் கவுரவ பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச நிதியத்தில் (ஐ.எம்.எப்.,) தலைமை பொருளாதார நிபுணர், இந்திய பிரதமருக்கான, தலைமை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட, உயர் பதவிகளை வகித்துள்ளார். திட்டக் கமிஷனிலும் இவர் பணியாற்றியுள்ளார்.
DINAVIDIYAL!