கேரள கோவில் தேவஸ்தானத்திற்கு பாரத ரிசர்வ் வங்கி கடிதம் அனுப்பியுள்ளது. அதில் அவர்களிடம் எவ்வளவு தங்கம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி கேட்டுள்ளதாக தே
வஸ்தானம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக குருவாயூர் தேவஸ்தானத்தின் பெயர் சொல்ல விரும்பாத உயர் அதிகாரி கூறுகையில், தேவஸ்தானத்தில் உள்ள தங்கம் குறித்து பாரத ரிசர்வ் வங்கி அனுப்பிய கடிதத்தை பெற்றுள்ளோம். நான் அந்த கடிதத்தை கோவிலின் நிர்வாக அமைப்பிற்கு அனுப்பியுள்ளேன். அனைத்து கொள்கை முடிவுகளையும் நிர்வாக குழு எடுக்கும் என்று அவர் கூறியுள்ளார். மாநிலத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலான ஐந்து வெவ்வேறு தேவஸ்தானத்தின் வாரியங்கள் கீழ் உள்ளது. மிகப்பெரிய திருவாங்கூர் தேவஸ்தானத்தின் வாரியத்தின் கீழ் உலக புகழ்பெற்ற சபரிமலை கோவில் உள்ளது.
பாரத ரிசர்வ் வங்கியின் மாநில இயக்குநர் சலிம் கங்காதரன் பேசுகையில், கடிதம் அனுப்பியதை உறுதி செய்துள்ளார். தங்க நகைகளை வாங்க இந்திய ரிசர்வ் வங்கியிடம் எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தின் இதய பகுதியில் அமைத்துள்ள பத்மநாபசுவாமி கோவிலின் 6வது ரகசிய அறையை திறக்க கடந்த ஜூலை 2011ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை ரகசிய அணையை திறக்கக்கூடாது எனவும் கோவில் நகைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனை தரும்படி கேரள மாநில அரசுக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து அறை திறக்கப்படவில்லை.
மற்ற 5 ஐந்து ரகசிய அறைகளில் கண்டு பிடிக்கப்பட்ட தங்கம், வைரம், அணிகலன்கள், சிலைகள் உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடிக்கு மேலாக இருக்கும் என கூறப்பட்டது DINAVIDIYAL!